திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மதனகாமேசுர லேகியம்.

மதனகாமேசுர லேகியம் சரக்குகள் :
  1. சுக்கு ,
  2. மிளகு ,
  3. திப்பிலி ,
  4. அதிமதுரம்,
  5. சிறு தேக்கு,
  6. நீர்முள்ளி வித்து,
  7. நெருஞ்சி வேர்,
  8. மல்லி,
  9. கோஷ்டம்,
  10. சாதிக்காய்,
  11. உழுந்து,
  12. எள்ளு,
  13. உலர் திராட்ச்சை,
  14. ஏல அரிசி ,
  15. முள்ளிலவம் பிசின்,
  16. இந்துப்பு,
  17. அதிவிடையம்,
  18. கஸ்தூரி மஞ்சள்,
  19. கதலி கிழங்கு,
  20. சாரணை கிழங்கு,
  21. அமுக்குரா கிழங்கு,
  22. தண்ணீர் விட்டான் கிழங்கு,
  23. கரிப்பான் சமூலம்,
  24. கொடி வேலி வேர்,
  25. ஆனை திப்பிலி,
  26. மருட்கிழங்கு,
  27. சிறுநாகப்பூ,
  28. வெந்தயம்,
  29. அப்ரக செந்தூரம்,
  30. கடுக்காய் தோல் ,
  31. நெல்லி வற்றல்,
  32. தான்றிக்காய் தோல்,
  33. கிராம்பு,
  34. சண்பக வித்து,
  35. நற்சீரகம்,
  36. சோம்பு,
  37. நிலபனங்கிழங்கு,
  38. லவங்க பட்டை இவையாவும் 25 gm .
  39. பசும் பாலில் அவித்து தோல் நீக்கி உலர்த்திய கருப்பு பூனைக்காலி விதை பருப்பு பொடி 1 கிலோ .
  40. தேன்.1 கிலோ,
  41. நெய்.  1/2 கிலோ ,
  42. கற்கண்டு 2 கிலோ . 
5 படி ஆவின் பாலில் கற்கண்டு போட்டு கரைத்து பாகு செய்து ,அதில் மேற்படி சூரணம் அனைத்தும் சிறுக சிறுக தூவி நெய் விட்டு கிண்டி மெழுகு பதத்தில் இறக்கி ஆறிய பின்பு தேன் விட்டு பிசைந்து வைக்கவும்.


உபயோகிக்கும் முறை :

  • தினமும் இரு வேளை கழற்சிக்காய் பிரமாணம் சாப்பிட வேண்டும். பால் ,நெய் ,முருங்கை பிஞ்சு அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
இதனால் தீரும் நோய்கள்:
  • வீரிய விருத்தி உண்டாகும்.
  • இந்திரியம் கட்டும்.
  • அதிசாரம்,
  • கிராணி,
  • பித்தம்,
  • சிலேத்துமம்,
  • வாய்வு தீரும்.